sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கடந்த ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 6684 அழைப்பு'

/

'கடந்த ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 6684 அழைப்பு'

'கடந்த ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 6684 அழைப்பு'

'கடந்த ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 6684 அழைப்பு'


ADDED : ஜன 09, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;13 தீயணைப்பு நிலையங்களுக்கும் கடந்த ஆண்டு, 6684 அழைப்புகள் வந்ததாக, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.

இதுகுறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களிலும் சேர்த்து கடந்த, 2023-ம் ஆண்டு ஜன, முதல் டிச., வரை மொத்தம், 6684 அழைப்புகள் வந்துள்ளன.

சிறிய தீ விபத்துகள் மாவட்டம் முழுவதும், 1652 இடங்களில் ஏற்பட்டுள்ளது. அதில் அதிக பட்சமாக பொள்ளாச்சியில், 291 இடங்களில் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 1,686 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, 1686 தீவிபத்து, அழைப்புகள் வந்துள்ளன.

மீட்பு தொடர்பாக, 4998 அழைப்புகள்


அதேபோல, மனிதர்கள், கால்நடைகள், பாம்புகள் மீட்பு தொடர்பாக, 4998 அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக, 757 அழைப்புகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்துள்ளது. 4998 அழைப்புகளில், 90 சதவீதம் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகளாகும்.

தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, தீ விபத்துகள் குறைந்து வருகின்றன. தற்போது அரசு வழங்கி உள்ள ஸ்கை லிப்ட் வாகனம் (வான் நோக்கி நகரும் ஊர்தி) மூலம் தீவிபத்துகளை மேலும் தடுக்க முடியும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கோவை மக்கள்'

''கடந்த காலங்களில் பொதுமக்கள் பாம்பை பார்த்தால், உடனே அடித்து கொன்று விடுவார்கள். ஆனால் தற்போது பெரும்பாலானோர் விழிப்புணர்வு அடைந்து உள்ளனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கோ, பாம்பு பிடி வீரர்களுக்கோ தகவல் தெரிவித்து விடுகின்றனர். பாம்பை கொல்லாமல் அதன் உயிரை காப்பாற்ற உதவும், கோவை மக்கள் பாராட்டுக்குரியவர்கள்,'' என்றார் அண்ணாதுரை.








      Dinamalar
      Follow us