தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 682 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு; ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தில் கண்டுபிடிப்பு

 682 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு; ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தில் கண்டுபிடிப்பு

 682 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு; ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தில் கண்டுபிடிப்பு


UPDATED : ஜன 03, 2026 07:45 AM

ADDED : ஜன 03, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2026 07:45 AM ADDED : ஜன 03, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தின் கீழ், அங்கன்வாடி, பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளில், 1,340 குழந்தைகள் இருதயம் உள்ளிட்ட உறுப்பு பாதிப்புகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் சுவாஸ்த்ய காரிக்ரம் ( ஆர்.பி.எஸ்.கே.,) திட்டத்தின் கீழ், 0 முதல் 18 வயதுள்ள குழந்தைகளின் பாதிப்புகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து, உரிய சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

0 முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையங்கள் வாயிலாகவுமபு 6 முதல் 18 வயதுள்ள குழந்தைகளை பள்ளிகள் வாயிலாகவும் பரிசோதனை செய்கின்றனர். கோவை மாவட்டத்தில் 27 குழுக்கள் மாணவர்களை 30 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி கண்காணிக்கின்றனர். அதன்படி, 2015 முதல் தற்போது வரை 1,340 குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் இருப்பது தெரிந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பிறவியிலேயே 682 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பும், 89 பேருக்கு ருமேடிக் இருதய பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டபு மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறிய தாவது:

பத்தாண்டுகளில் அங்கன்வாடிகளில் 1, 44, 732 குழந்தைகளும், பள்ளி மாணவர்கள் 2,08,032 பேரும் பரிசோதிக்கப்பட்டனர். பிறவி இருதய பாதிப்பு 682 பேருக்கும், ருமேடிக் இருதய குறைபாடு 89, பாதவளைவு 167 பேர், உதடு பிளவு 174 பேர், பிறவி கண் புரை குறைபாடு 46, பிறவி காது குறைபாடு 139 பேர், முதுகு தண்டுவட பிரச்னை 55 பேருக்கு கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்துள்ளோம்.

சர்ஜரி தேவையுள்ள அனைவருக்கும் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, சாதாரண கண் பிரச்னை, காது, பல் போன்ற பிரச்னைகள் உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us