/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இம்மானுவேல் சேகரனுக்கு 68வது குருபூஜை விழா
/
இம்மானுவேல் சேகரனுக்கு 68வது குருபூஜை விழா
ADDED : செப் 11, 2025 09:32 PM

வால்பாறை; வால்பாறையில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, குருபூஜை நடந்தது.
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல்சேகரனுக்கு, 68வது குருபூஜையை முன்னிட்டு வால்பாறை தேவேந்திரவேளாளர் கூட்டமைப்பின் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க..நகர செயலாளர் சுதாகர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தியாகி படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
குருபூஜையை முன்னிட்டு நடந்த அன்னதான விழாவை, அ.தி.மு.க., நகர துணை செயலாளர் பொன்கணேஷ் துவக்கி வைத்தார். இதில், நுாற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பா.ஜ. - நா.த.க. - த.வெ.க. - பு.த. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.