தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்திர பதிவின் போது 7 விஷயம் மறக்காதீங்க 

பத்திர பதிவின் போது 7 விஷயம் மறக்காதீங்க 

பத்திர பதிவின் போது 7 விஷயம் மறக்காதீங்க 


UPDATED : மே 19, 2026 06:31 PM

ADDED : மே 19, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 06:31 PM ADDED : மே 19, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:பத்திரங்களை பதிவு செய்யும் போது ஏழு விஷயங்களை கட்டாயம் பின்பற்ற பதிவுத்துறை கோவையிலுள்ள, 18 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அவை வருமாறு:

பதிவு செய்யப்படும் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்திலும் விற்பவர் வாங்குபவர் என்று இரு தரப்பிடமும் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவுக்கான ஆவணங்களுடன் அதற்கான தொகையை இ-பேமென்ட்வாயிலாக செலுத்திய ரசீது இணைக்க வேண்டும்.

பதிவு செய்வதற்கான டோக்கன் பெறப்பட்டதற்கான பிரிண்ட் அவுட் அவசியம்.

சொத்தின் அசல் ஆவணம் மற்றும் அதற்கான டி.எஸ்.எல்.ஆர்., அல்லது பட்டா, வில்லங்க சான்று இணைப்பு அவசியம்.

விற்பவர் வாங்குபவர் ஆதார் எண், வருமானவரி கணக்கு எண் மற்றும் அதன் நகல்களை பிரிண்ட் எடுத்து இணைப்பது அவசியம்.

ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கும் சொத்துவிபரங்களும், இணைய அட்டணை 2 வாயிலாக உள்ளீடு செய்யப்படும் விபரங்களும் ஒரே மாதிரி இருப்பது கட்டாயம்.

டோக்கன் பெற்ற நேரத்தில் அனைத்து ஆவணங்களும் சமர்பிக்க வேண்டும்.

ஆவணங்களில் சில விடுபட்டிருந்தால் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்படும். செலுத்திய கட்டணம் ரத்தாக வாய்ப்பு உள்ளது.

அதனால் ஆவணங்கள் ஏதும் விடுபடாமல் ஒரு தடவைக்கு பலமுறை சரிபார்த்து அதன்பின்பே ஆவணங்களை பதிவுக்கு வைக்க வேண்டும்.

இந்த ஏழு நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென்று பதிவுத்துறை ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us