/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7 ஆயிரம் பேர் எழுதினார்கள்; அனைவரும் 'பாஸ்' ஆனார்கள்
/
7 ஆயிரம் பேர் எழுதினார்கள்; அனைவரும் 'பாஸ்' ஆனார்கள்
7 ஆயிரம் பேர் எழுதினார்கள்; அனைவரும் 'பாஸ்' ஆனார்கள்
7 ஆயிரம் பேர் எழுதினார்கள்; அனைவரும் 'பாஸ்' ஆனார்கள்
ADDED : ஜூன் 27, 2025 11:23 PM
கோவை; மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் தேர்வெழுதிய ஏழாயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம், இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அடிப்படை எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
2024-25 கல்வியாண்டு இலக்காக, மேலும் 5,33,100 பேருக்கு கல்வியறிவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெற்ற தேர்வில், 7,306 பேர் பங்கேற்றனர்; அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'கோவை நகரம், தொண்டாமுத்தூர், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், காரமடை, அன்னூர் உள்ளிட்ட 15 வட்டார மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
நவம்பர் மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைகிறது. அதற்கு முன், யாராவது எழுத்தறிவு பெறாமல் இருக்கிறார்களா என்பதை அறிய, மீண்டும் கணக்கெடுப்பு நடத்த உள்ளோம். அவ்வாறு யாராவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதனையடுத்து, கோவை மாவட்டம் விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படலாம்' என்றார்.
இத்திட்டத்தில், 796 தன்னார்வலர்கள் கல்வி கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.