ADDED : ஜன 29, 2026 05:28 AM

வால்பாறை: வால்பாறை அருகே, டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், ஏழு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதிக்கு காலை, 8:30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது, உருளிக்கல் எஸ்டேட் பெரியார் நகரிலிருந்து வறட்டுப்பாறை எஸ்டேட்டுக்கு தேயிலை பறிக்கும் பணிக்காக, 13 தொழிலாளர்கள் டிராக்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.
எதிரே அதிவேகமாக வந்த அரசு பஸ், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விக்டோரியா, 50, சரோஜா,58, ஜோதி, 60, நடராஜ், 52, ஜானகி,38, சரஸ்வதி,52, சரோஜா, 50, ஆகிய ஏழு பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்து குறித்து, டிராக்டர் டிரைவர் விஷ்ணு, அரசு பஸ் டிரைவர் காளிதாஸ் ஆகியோரிடம், ேஷக்கல்முடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
