ADDED : ஏப் 29, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
கோவை: மே 4ல் ஓட்டு எண்ணுவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், டி.ஆர்.ஓ. நாராயணன் முன்னிலை வகித்தனர். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் சுற்றுகள் வாரியாக எண்ணுவது, உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடுவது குறித்து விளக்கிய மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார், 7,000 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தேர்தல் தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
