/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு வழங்க 7,000 மரக்கன்றுகள் தயார்
/
விவசாயிகளுக்கு வழங்க 7,000 மரக்கன்றுகள் தயார்
ADDED : அக் 04, 2024 11:36 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில், விவசாயிகளுக்கு வழங்க 7,000 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கடங்கள், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ், தேக்கு மகாகனி, சவுக்கு, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த மரக்கன்றுகள், நன்கு வளர்ந்த பிறகு, வனப்பகுதி நடப்படும். மேலும், விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
அதன் படி மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு, 7,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. தேக்கு 3,000, மகாகனி 2,000, மலைவேம்பு 2,000 என மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் கார்டு நகல், பட்டா, சிட்டா நகல், போட்டோ, நிலத்தின் ஆவணங்களை கொடுத்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தெரிவித்தனர்.--