ADDED : செப் 05, 2025 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; காருண்யா பல்கலை வேந்தர் பால் தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய மருத்துவ சங்க ம் கோவை கிளை மற்றும் காருண்யா பல்கலை சார்பில், பல்கலை வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. பல்கலை மற்றும் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பதிவு செய்து, 714 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.
சேகரிக்கப்பட்ட ரத்தம், இந்திய மருத்துவ சங்க கோவை கிளையில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளது. பல்கலை பதிவாளர் விஜய், இந்திய மருத்துவ சங்க கோவை கிளை செயலாளர் சீதாராம், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், ஐ.எம்.ஏ., உடலுறுப்பு தான தலைவர் ராஜேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.