/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் கற்க ஆர்வம் காட்டும் பிற மாநில மக்கள்; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 7,306 பேர் தேர்வு
/
தமிழ் கற்க ஆர்வம் காட்டும் பிற மாநில மக்கள்; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 7,306 பேர் தேர்வு
தமிழ் கற்க ஆர்வம் காட்டும் பிற மாநில மக்கள்; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 7,306 பேர் தேர்வு
தமிழ் கற்க ஆர்வம் காட்டும் பிற மாநில மக்கள்; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 7,306 பேர் தேர்வு
UPDATED : மே 22, 2025 03:30 AM
ADDED : மே 22, 2025 12:35 AM
கோவை,; மத்திய அரசின், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் கோவையில் 7,306 பேர் தேர்வுக்கு தயாராகும் நிலையில், தமிழ் கற்க பிற மாநிலத்தவர்களும் ஆர்வம் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் கீழ், இதுவரை 12 லட்சத்துக்கும் மேலானோர் அடிப்படை எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2024 - 25 கல்வியாண்டில் மேலும் 5,33,100 பேருக்கு கல்வியறிவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 7,306 பேர், வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்த தேர்வுகள் கோவை நகரம், தொண்டாமுத்தூர், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், காரமடை, அன்னூர் உள்ளிட்ட 15 வட்டார மையங்களில் நடைபெற இருக்கின்றன. இத்திட்டத்தில், 796 தன்னார்வலர்கள் பங்கேற்று கல்வி அளித்து வருகின்றனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
இதுவரை, 6 வட்டார மையங்கள் முழுமையான எழுத்தறிவு பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வில் பங்கேற்கும் பெரும்பாலானோர் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.
அவர்களுக்கு எழுத தேவையான சிலேட், பென்சில் பாக்ஸ், நோட்புக், டிராயிங் மற்றும் கலரிங் கிட்கள் வழங்கப்படுகின்றன.
வீடு வீடாக சென்று, கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. அதனால், கோவை மாவட்டம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ் படிக்க ஆர்வம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழி கற்க பிற மாநிலத்தவர் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
குறிப்பாக, கேரளத்தை சேர்ந்த பட்டதாரிகள், தங்களது பெயரையாவது தமிழில் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன், தமிழ்மொழி வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கென சிறப்பு அனுமதியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.