/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் தொழில் முனைவோர் 75 விண்ணப்பங்கள் பரிந்துரை
/
மகளிர் தொழில் முனைவோர் 75 விண்ணப்பங்கள் பரிந்துரை
மகளிர் தொழில் முனைவோர் 75 விண்ணப்பங்கள் பரிந்துரை
மகளிர் தொழில் முனைவோர் 75 விண்ணப்பங்கள் பரிந்துரை
ADDED : டிச 12, 2025 05:16 AM
கோவை: மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், கோவை மாவட்டத்தில் இதுவரை, 75 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் வகையில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், கைவினைப் பொருட்கள், சந்தை மதிப்பு அதிகமுள்ள சேவை தொழில்கள், ஊட்டச்சத்து பொருட்கள், மூலிகை பொருட்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் துவங்கப்பட்டது முதல் இதுவரை, கோவை மாவட்டத்தில், 205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், நேர்முகத் தேர்வு நடத்தி 75 பேரின் விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் தயாரித்தல், ஆரி எம்ப்ராய்டரி, பாக்குமட்டை தயாரிப்பு, யு.பி.வி.சி., ஜன்னல் தயாரிப்பு ஆகியவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வருகின்றன என, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சண்முகசிவா தெரிவித்தார்.

