/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 12, 2025 05:16 AM
கோவை: கோவை கலெக்டர் ஆபிசுக்கு, 15 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் வாயிலாகி நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், பிற்பகல் 2 மணிக்கு 'ஆர்டிஎக்ஸ்'குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு சிக்கவில்லை.
கடந்த ஐந்து மாதத்தில், 15 வது முறையாக இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். என்ன காரணத்திற்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை. 'டார்க் நெட்' வாயிலாக மிரட்டல் விடுப்பதால், ஐ.டி., யை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

