/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
78 கிலோ குட்கா பறிமுதல்; 6 பேர் கைது
/
78 கிலோ குட்கா பறிமுதல்; 6 பேர் கைது
ADDED : செப் 15, 2025 10:34 PM
சூலுார்; சூலுார், கருமத்தம்பட்டியில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை விற்ற, ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூலுார் அடுத்த குரும்ப பாளையம் பகுதியில், சூலுார் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள பூங்காவில் சந்தேகப்படும்படியாக சுற்றிய நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், கார்த்திகேயன், வீரசின்னா, முத்துக்குமார் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், கருமத்தம்பட்டி போலீசார் கணியூர் டோல்கேட் அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 78 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கின. திருநெல்வேலி யை சேர்ந்த கொம்பையா ,33, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவருக்கு குட்காவை சப்ளை செய்த, சோமனூரை சேர்ந்த ஜெகன் அந்தோணி ராஜேஷ்,41 என்பவரை கைது செய்தனர. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.