/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அடிவாரத்தில் 79 மி.மீ., மழைப்பொழிவு
/
சிறுவாணி அடிவாரத்தில் 79 மி.மீ., மழைப்பொழிவு
ADDED : ஜூன் 16, 2025 10:13 PM
கோவை; சிறுவாணி அடிவாரத்தில், 79 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழை தொடர்வதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
வழக்கமாக ஜூன் முதல் செப்., வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். நடப்பாண்டு ஒரு வாரம் முன்னதாக மே மாதமே துவங்கியது. பாலக்காடு கணவாய் மற்றும் கேரள வனப்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நல்ல மழை பெய்து வருகிறது.
சில நாட்கள் இடைவெளி விட்ட பருவ மழை இரண்டாவது சுற்று மீண்டும் துவங்கியது. தற்போது கன மழையாக பெய்து வருகிறது. பில்லுார் அணை நிரம்பி விட்டது. சிறுவாணி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில், 147 மி.மீ., அடிவாரத்தில், 79 மி.மீ., பதிவாகியுள்ளது. 43.13 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மலைப்பகுதியில் மழை தொடர்வதால், நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.