ADDED : ஆக 30, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில், முதுநிலை மருத்துவ நீட் தேர்வு நடந்தது.
அடிப்படை மருத்துவ படிப்பை முடித்து, முது நிலை மருத்துவர் ஆவதற்கான முதுநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கி மதியம், 12:30 மணிக்கு நிறைவு பெற்றது.
இதில், பொள்ளாச்சி எம்.ஜி.எம்., கல்லூரியில் - 85, பி.ஏ., கல்லூரியில் - 150, கிணத்துக்கடவு வி.எஸ்.பி., கல்லூரியில் - 431 மற்றும் அர்ஜுன் கல்லூரியில் - 128 பேர் என, மொத்தம் 794 நபர்கள் தேர்வு எழுதினர்.
மேலும், 54 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
