/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரியின் 7வது பட்டமளிப்பு விழா
/
ரத்தினம் கல்லுாரியின் 7வது பட்டமளிப்பு விழா
ADDED : டிச 01, 2024 11:11 PM

கோவை; ரத்தினம் கல்லுாரியின் 7வது பட்டமளிப்பு விழா, ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடந்தது.
விழாவில் கிராப்ட்டன் நிறுவனத்தின் தேசிய தலைவர் சுராப் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரத்தினம் கல்வி குழுமங்களின் இயக்குனர் சீமா தலைமை தாங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், துணை தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் கீதா வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், ''படித்து முடித்து வெளியில் செல்லும் மாணவர்கள் வேலை செய்பவர் என்ற நிலையில் இருந்து, வேலை கொடுப்பவர் என்ற நிலைக்கு மாற வேண்டும்,'' என்றார்.
ரத்தினம் கல்வி குழுமங்களின் இயக்குனர் சீமா பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் கற்றலை வகுப்பறையோடு நிறுத்திக்கொள்ளாமல், உலக அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.