/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சைக்கு 8 படுக்கைகள்
/
'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சைக்கு 8 படுக்கைகள்
ADDED : மார் 31, 2025 10:12 PM

மேட்டுப்பாளையம்; வெப்ப அலையால் ஏற்படும், 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகள் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:
வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் ஆண்கள் பிரிவில் 4 படுக்கைகளும், பெண்கள் பிரிவில் 4 படுக்கைகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான அனைத்து மருத்துகளும் கை இருப்பில் உள்ளன.
மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு -சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.--