/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் சிக்கிய 8 கிலோ கஞ்சா; ரயில்வே போலீசார் விசாரணை
/
ரயிலில் சிக்கிய 8 கிலோ கஞ்சா; ரயில்வே போலீசார் விசாரணை
ரயிலில் சிக்கிய 8 கிலோ கஞ்சா; ரயில்வே போலீசார் விசாரணை
ரயிலில் சிக்கிய 8 கிலோ கஞ்சா; ரயில்வே போலீசார் விசாரணை
ADDED : மார் 31, 2025 11:26 PM

கோவை; ரயிலில் கடத்தி வரப்பட்ட எட்டு கிலோ கஞ்சாவை, கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
கோவைக்கு, வடமாநிலங்களில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தன்பாத் - ஆலப்புழா ரயில், நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
பொது பெட்டியில் சோதனை செய்த போது, ஒரு மூட்டை மட்டும் கேட்பாரற்று கிடந்தது. சோதனையிட்டபோது எட்டு கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் சென்ற நபர், போலீசார் சோதனை நடத்துவதை அறிந்து, மூட்டையை அப்படியே போட்டு விட்டு, தப்பியது தெரிந்தது. கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த போலீசார், தப்பிய நபரை தேடி வருகின்றனர்.