/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் 85 மி.மீ., மழை பதிவு
/
சிறுவாணியில் 85 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 26, 2025 05:33 AM
கோவை; சிறுவாணி அணைப்பகுதியில், 85 மி.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில் நீர் மட்டமானது, 21.55 அடியாக நேற்று உயர்ந்தது.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. போதிய மழை இல்லாததால்இம்மாத துவக்கத்தில், 17 அடிக்கும் குறைவாகவே அணையின் நீர் மட்டம் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளில், நல்ல மழை பெய்துவருகிறது.
நேற்று முன்தினம் காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில், 53 மி.மீ., மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 80 மி.மீ., மழையும் பதிவாக, 19 அடியாக நீர் மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 6.2 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது, அடிவாரத்தில், 73 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 85 மி.மீ., மழையும் காலை, 8:00 மணி நிலவரப்படி பதிவாக,நீர் மட்டமானது, 21.55 அடியாக உயர்ந்திருந்தது. குடிநீர் தேவைக்காக, 6.7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.