/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு நேற்றுடன் 8.50 லட்சம் டோக்கன்
/
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு நேற்றுடன் 8.50 லட்சம் டோக்கன்
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு நேற்றுடன் 8.50 லட்சம் டோக்கன்
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு நேற்றுடன் 8.50 லட்சம் டோக்கன்
ADDED : ஜன 06, 2025 02:05 AM
கோவை; பொங்கல் தொகுப்பு வழங்க, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 8.50 லட்சம் டோக்கன் நேற்று வரை கொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என, தமிழக அரசு சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,540 ரேஷன் கடைகள் வாயிலாக 11.11 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், 1,992 பேருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இது தவிர, 70 சதவீதம் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
பொங்கல் தொகுப்பு வாங்கும், அரிசி கார்டுகளுக்கு முன்னதாக டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, 8.50 லட்சம் கார்டுதாரர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக நாளை அல்லது நாளைய மறுநாள், முழுமையாக டோக்கன் கொடுக்கும் பணி முடிந்து விடும்.
கரும்புக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு, கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. நீலகிரி, வால்பாறை போன்ற மலை பகுதிகளுக்கு, கரும்பு முதலில் அனுப்பி வைக்கப்படும்.
பொங்கல் தொகுப்பு வழங்கும் நாட்களில், வழக்கமாக கொடுக்கும் ரேஷன் பொருட்கள் நிறுத்தி வைக்கப்படும். பொங்கல் தொகுப்பு வாங்கும் கூட்டம், குறைந்தவுடன் வழங்கம் போல் பொருட்கள் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.