தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 89,300 மாட்டு இனங்களுக்கு கோமாரி தடுப்பூசி போட்டாச்சு

 89,300 மாட்டு இனங்களுக்கு கோமாரி தடுப்பூசி போட்டாச்சு

 89,300 மாட்டு இனங்களுக்கு கோமாரி தடுப்பூசி போட்டாச்சு


ADDED : ஜன 06, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில், இதுவரை 89,300 மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 2.39 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் கடந்த டிச. 29ம் தேதி துவங்கி, தொடர்ந்து, 21 நாட்கள் நடக்கிறது. தடுப்பூசி பணிக்காக, 117 குழுவினர் களத்தில் உள்ளனர்.

கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் மகாலிங்கம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை வரை (டிசம்பர் 29ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை) 89,300 மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காரமடை வட்டாரத்தில் 25,894 மாட்டினங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 5,550 தடுப்பூசி போடப்பட்டுள்ளது , என்றார். ---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us