/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு
/
தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு
ADDED : ஜூன் 29, 2025 12:35 AM
கோவை : தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 18-தமிழ், 19-ஆங்கிலம், 20-கணிதம், 21-அறிவியல், 22-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் 17 வரை ஆன்லைனில் பெறப்படும்.
தேர்வுத் துறை இணையதளமான, www.dge.tn.gov.in ல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இணையவழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195, சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் பதிவு செய்யலாம். இதற்காக, தேர்வுக்கட்டணத்திற்கு கூடுதலாக ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும்.
முதன்முறையாக தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றவர்கள், பள்ளி பதிவுத்தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.