/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் மதுக்கடையில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.,வினர் 9 பேர் கைது
/
டாஸ்மாக் மதுக்கடையில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.,வினர் 9 பேர் கைது
டாஸ்மாக் மதுக்கடையில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.,வினர் 9 பேர் கைது
டாஸ்மாக் மதுக்கடையில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.,வினர் 9 பேர் கைது
ADDED : மார் 20, 2025 05:42 AM

கோவை : டாஸ்மாக் மதுபான கடையில், டாஸ்மாக் ஊழலை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் படம் அச்சிட்ட போஸ்டர் ஒட்டியதற்காக, பா.ஜ.,வினர் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மதுபான கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதை கண்டித்து, பா.ஜ.,வினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை, பா.ஜ., ரத்தினபுரி மண்டல் தலைவர் அர்ஜூனன் தலைமையில் பா.ஜ.,வினர், டாஸ்மாக் மதுக்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம் அச்சிட்ட போஸ்டர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரத்தினபுரி, கண்ணப்பா நகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் போஸ்டர் ஒட்டினர். ரத்தினபுரி போலீசார் பா.ஜ., ரத்தினபுரி மண்டல் தலைவர் அர்ஜூனன், கட்சி நிர்வாகிகள் இரண்டு பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்து, ரத்தினபுரி, ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள கர்நாடகா அசோசியேஷன் மண்டபத்தில் வைத்தனர்.
இதையடுத்து, பெண்கள் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை போலீசார் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மண்டபத்தின் முன் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் கைது செய்த ஒன்பது பேரையும் விடுவித்தனர்.