ADDED : மார் 22, 2026 08:21 PM
தொண்டாமுத்தூர்: மோளப்பாளையத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து, 3.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோளப்பாளையத்தில் உள்ள மோகன் என்பவரின் தோட்டத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், குருநாதன், விநாயகபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ், காட்டூரை சேர்ந்த கணேஷ்குமார், கோவில்பாளையத்தை சேர்ந்த சுபாஷ், பி.என்.புதூரை கண்ணாமாறன், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரவீன், நீலாம்பூரை சேர்ந்த நாகராஜ் ஆகிய 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 3.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
