ADDED : ஆக 05, 2025 11:52 PM

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை. 90 சதவீதம் குற்றங்களுக்கு அரசு மட்டுமே காரணம். பல பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. மது, போதைப்பொருட்கள் தான் இதற்கு முக்கிய காரணம். அரசு இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - இளங்கோவன் சுயதொழில், பெ.நா.பாளையம்:
'பெண்களும் காரணம்' பெண்கள் பாதுகாப்பு குறைபாடுக்கு, பெண்களும் ஒரு விதத்தில் காரணமாக உள்ளனர். நாம் சரியாக இருந்தால், எதற்கும் பயப்படத் தேவையில்லை. நமது நடவடிக்கைகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். - ஆலிஸ் சுயதொழில், பாப்பநாயக்கன்பாளையம்
'கேரளாவில் சட்டங்கள் கடுமை' தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். கேரளாவில் சட்டங்கள் கடுமையாக உள்ளன. அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடக்க, சட்டங்கள் கடுமையாக இருப்பதே காரணம். - ஜூனா தாமஸ் இல்லத்தரசி, சாலக்குடி