/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி
/
9 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி
ADDED : ஜூலை 12, 2025 01:11 AM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 7ம் கட்டமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 2ம் தேதி துவங்கியது. பசு மற்றும் எருமைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
இதுகுறித்து கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
தினமும் 200 முதல் 300 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 21 நாட்கள் இப்பணி நடைபெறும். இதுவரை மேட்டுப்பாளையம் தாலுகாவில் சுமார் 9 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என்றார்.
---