/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
96 விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன்
/
96 விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன்
ADDED : ஜன 28, 2025 11:14 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 96 விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக, 2,797 மெட்ரிக் டன் விளை பொருட்கள்,4.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 376 விவசாயிகள் மற்றும் 78 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், விற்பனை கூடத்தின் வாயிலாக, 96 விவசாயிகளுக்கு, 4.51 கோடி மதிப்பீட்டில் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு, விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் இருப்பு வைத்துள்ள, 6 வியாபாரிகளுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, 70 சதவிகிதம் வரை கடன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 6 வியாபாரிகளுக்கு 2.21 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை, கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.