/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 98 பேர் உடல் தானம்
/
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 98 பேர் உடல் தானம்
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 98 பேர் உடல் தானம்
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 98 பேர் உடல் தானம்
ADDED : அக் 30, 2025 11:22 PM

கோவை:  கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஜன., மாதம் முதல் தற்போது வரை 33 பேர் உடல் தானமாக பெறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மா. கம்யூ., சார்பில் உடல் தானம் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது. இக்கட்சியை சார்ந்த, 98 நபர்கள் நேற்று உடல் தானம் செய்வதற்கான கோப்புகளை அரசு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா கூறியதாவது:
இறந்தவர்களின் உடல், மருத்துவம் படிக்கும மாணவர்கள் பயிற்சிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் தானமாக வழங்கப்படுவது உடல் தானம். அரசு மருத்துவமனைக்கு கடந்த ஜன., முதல் 199 பேர் உடல் தானத்திற்கு பதிவு செய்துள்ளனர்; 33 உடல்கள் தானமாக பதப்படுத்தி பெற்று கல்விக்காக பயன்படுத்தி வருகிறோம்.
கண் தானம், உடல் தானம் செய்பவர்கள் முறையாக வாரிசுகளுக்கு தெரிவித்து இருப்பது அவசியம். ஒருவர் இறந்தவுடன் கண் ஆறு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும். அதுசார்ந்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், பலர் தானம் செய்தும் பயன்படுத்த முடியாமல் போகும் சூழல் உள்ளது. இன்று, (நேற்று) 98 பேர் உடல் தானம் செய்வதற்கான கோப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இவர்களுக்கு சான்றிதழ் ஒரு வாரத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்வில், முன்னாள் எம்.பி., நடராஜன், அனாடமி துறைத்தலைவர் விதுலேகா, கட்சி மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

