தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அ'- குறுமைய தடகள போட்டி துவக்கம்

'அ'- குறுமைய தடகள போட்டி துவக்கம்

'அ'- குறுமைய தடகள போட்டி துவக்கம்


ADDED : ஆக 11, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; அ-குறுமைய தடகள போட்டிகளை, தேவாங்க அரசு உதவிபெறும் பள்ளி நடத்தி வருகிறது.

கோவை நேரு ஸ்டேடியத்தில், நேற்று துவங்கிய தடகள போட்டியில் மாணவ, மாணவியர், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதலில், கிஷோர், முகமது பரான், பாதில் ரகுமான் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

400 மீ., ஓட்டத்தில் நிகேஷ், ஜெய்வந்த், கவுதம் ராம் ஆகியோரும், 1,500 மீ., ஓட்டத்தில் விசால், அப்துல்லா, துளிர் மதியன் ஆகியோரும், 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 400 மீ., ஓட்டத்தில் நதியா, மினா பிரியா, விவேகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

1,500 மீ., ஓட்டத்தில் அனிதா, கிருத்திகா, மீனா லோச்சனா ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 1,500 மீ., ஓட்டத்தில் ராஜூ, அன்புசெல்வன், சஞ்சை குமார் ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணு சுபதேவ், கமலேஷ், மஹாராஜா ஆகியோரும், வட்டு எறிதல் போட்டியில் ஆரிப்முகமது, ராஜூ, மாதேஸ் ஆகியோரும், முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றனர். இன்றும் போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us