/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டிற்குள் புகுந்து கடித்த சிறுத்தை 4 வயது சிறுவன் படுகாயம்
/
வீட்டிற்குள் புகுந்து கடித்த சிறுத்தை 4 வயது சிறுவன் படுகாயம்
வீட்டிற்குள் புகுந்து கடித்த சிறுத்தை 4 வயது சிறுவன் படுகாயம்
வீட்டிற்குள் புகுந்து கடித்த சிறுத்தை 4 வயது சிறுவன் படுகாயம்
ADDED : ஆக 01, 2025 09:56 PM

வால்பாறை:வால்பாறை அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை கடித்ததில், துாங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே, கேரள மாநிலத்துக்குட்பட்ட அதிரப்பள்ளி செல்லும் வழியில் மளுக்கப்பாறை எஸ்டேட் உள்ளது.
இங்குள்ள வீரன்குடி பழங்குடியின காலனியை சேர்ந்த பேபி - ராதிகா தம்பதி, 4 வயது மகன் ராகுலுடன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு, 2:00 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை, வீட்டினுள் புகுந்து சிறுவன் ராகுலின் கழுத்துப்பகுதியை கவ்வி இழுத்துச் செல்ல முற்பட்டது.
சிறுவனின் அலறல் கேட்டு கணவன் - மனைவி இருவரும் எழுந்து கூச்சலிட்டதும், சிறுவனை விட்டு சிறுத்தை தப்பியது.
இதில், சிறுவனின் கழுத்து, காது, தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. சாலக்குடி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து சாலக்குடி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பழங்குடியின மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.