/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுழன்று அடிக்கும் ஆடி காற்றில் சேதமடையும் இலை வாழை
/
சுழன்று அடிக்கும் ஆடி காற்றில் சேதமடையும் இலை வாழை
சுழன்று அடிக்கும் ஆடி காற்றில் சேதமடையும் இலை வாழை
சுழன்று அடிக்கும் ஆடி காற்றில் சேதமடையும் இலை வாழை
ADDED : ஆக 14, 2025 08:44 PM

தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டா ரத்தில், ஆடி காற்றின் வேகத்தால், வாழை மரத்தின் இலைகள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. வாழையில், இலை வாழை மற்றும் காய் வாழை சரிசமமாக பயிரிடப்படுகிறது. இந்நிலையில், ஆடி காற்றில், இலை வாழை மரத்தில் உள்ள இலைகள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து நரசீபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில்,பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்ததால், இலை வாழை பயன்பாடு அதிகரித்தது. ஆடி மாதம் முகூர்த்த நாள் இல்லாததால், ஹோட்டலுகளுக்கு மட்டும் வாழை இலை பயன்பாடு உள்ளது. தற்போது, 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை, விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், மழை இல்லாமல் ஆடி காற்று, சுழன்று அடிப்பதால், வாழை மரத்தில் உள்ள இலைகள் கிழிந்து சேதமடைகிறது. அந்த இலைகளை விற்பனை செய்யமுடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது,என்றனர்.

