/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சிதறும் மட்டை; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டில் சிதறும் மட்டை; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : செப் 19, 2024 09:59 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோவில்பாளையம் - நெகமம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. பெரும்பாலும் டிராக்டர் மற்றும் டெம்போ போன்ற வாகனங்களில், தென்னை சார்ந்த பொருட்கள் அதிகம் ஏற்றி செல்லப்படுகிறது.
சில வாகனங்களில், தேங்காய் மட்டை முறையாக தார்பாலின் சீட்டுகள் கொண்டு மூடாமல் எடுத்து செல்வதாலும், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதாலும், ரோட்டில் தேங்காய் மட்டைகள் சிதறி விழுகிறது.
அந்த வாகனத்தின் பின்னால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சிதறி விழும் மட்டையில் சிக்கி, விபத்துக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், ரோட்டில் இருக்கும் மட்டை மீது, வேகமாக வரும் இருசக்கர வாகனம் ஏறும் போது, தடுமாறி ஓட்டுநர்கள் கீழே விழுகின்றனர்.
எனவே, அதிக லோடு மற்றும் முறையாக தார்பாலின் பயன்படுத்தாமல் தேங்காய் மட்டை எடுத்து செல்லும் வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.