/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்வையாளர்களை மிரட்டிய பைக் ரேஸ்
/
பார்வையாளர்களை மிரட்டிய பைக் ரேஸ்
ADDED : அக் 08, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி மைதானத்தில், பைக் ரேஸ் நடந்தது. இதில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், கலந்து கொண்டனர்.
போட்டியை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார். வீரர்களுக்கு, 15 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மேடு, பள்ளங்களுடன் அமைக்கப்பட்டிருந்த சவாலான டிராக்கில், வீரர்கள் திறமையாக பைக்கை ஓட்டிச் சென்று, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். முடிவில், போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.