/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளத்தில் நிழற்கூரை; பயன்படுத்த முடியல!
/
பள்ளத்தில் நிழற்கூரை; பயன்படுத்த முடியல!
ADDED : ஏப் 25, 2025 11:30 PM

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, மாணிக்கா மாதா கோவில் சந்திப்பில், நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு பயணியர் நிழற்க்கூரை கட்டப்பட்டது. ஆனால், பணி முழுமையாக நிறைவு பெறாத நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரை பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளத்தில் அமைந்துள்ளது. பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு ஆண்டாக திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வால்பாறை நகராட்சி அதிகாரிகள் மக்களின் நலன் கருதி உடனடியாக பயணியர் நிழற்கூரையை மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாணிக்கா எஸ்டேட் ரோட்டில் கட்டப்பட்டுள்ள நிழற்கூரை நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஒட்டி இருப்பதால், ரோடு விரிவாக்கத்தின் போது, நிழற்க்கூரை பள்ளத்தில் இருப்பது போன்று மாறியுள்ளது. உயர்த்தி கட்ட மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின், பணிகள் உடனடியாக துவங்கப்படும்,' என்றனர்.

