தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிழற்கூரை அவசியம்

 நிழற்கூரை அவசியம்

 நிழற்கூரை அவசியம்


ADDED : டிச 05, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2025 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றாக தளி ரோடு உள்ளது. இந்த ரோட்டில், முதற்கிளை நுாலகம், குட்டைத்திடல், நகராட்சி அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளன.

இந்த ரோடு வழியாக, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, சின்னார், மூணார் பகுதிகள், கிராமங்களுக்கு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.

இந்த ரோட்டில், பிரதான பஸ் நிறுத்தமாக யூனியன் ஆபீஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், பெண்கள், முதியோர், குழந்தைகள் திறந்த வெளியில், வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எனவே, இங்கு நிழற்கூரை அமைக்க பயணியர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us