/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுக்கூடத்தில் மனம் கவரும் ஓவியம்; பழங்குடியினர் பள்ளியில் அசத்தல்
/
உணவுக்கூடத்தில் மனம் கவரும் ஓவியம்; பழங்குடியினர் பள்ளியில் அசத்தல்
உணவுக்கூடத்தில் மனம் கவரும் ஓவியம்; பழங்குடியினர் பள்ளியில் அசத்தல்
உணவுக்கூடத்தில் மனம் கவரும் ஓவியம்; பழங்குடியினர் பள்ளியில் அசத்தல்
ADDED : ஆக 03, 2025 09:10 PM

வால்பாறை; வால்பாறையில் உள்ள, உண்டு உறைடவிடப்பள்ளியில் பழங்குடியின மாணவர்களை கவரும் வகையில், உணவுக்கூடத்தில் வண்ணமயமான ஓவியம் வரையப்பட்டுள்ளது.
வால்பாறை நகரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
கோவை 'நேசம் டிரஸ்ட்' சார்பில், மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் இந்த பள்ளி செயல்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய இந்த பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களை கவரும் வகையில், வண்ணமயான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வகுப்பறை முதல் உணவகம் வரை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வண்ணமயான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
பழங்குடின மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது, விளையாட்டு போட்டிகளிலும் அபரமாக விளையாடி பரிசுகளை வென்றுள்ளனர். மாணவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் படிக்கும் வகையில் போதிய வகுப்பறைகள் உள்ளன.
அனைத்து வகுப்பறைகளும் மாணவர்களின் மனதை கவரும் வகையில், வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தற்போது பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள உணவுக்கூடம் ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.