/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
/
போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
ADDED : அக் 09, 2024 12:11 AM
கோவை : போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த நான்கு பேர் மீது, பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கெம்பட்டி காலனி, செட்டிவீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பெரியகடை வீதி பகுதியில் உள்ள, ஒரு கடை முன் இருந்த ஊழியர்கள், பொதுமக்களை கடைக்குள் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதைப் பார்த்த முருகேசன், அவர்களிடம் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படக்கூடாது என, எச்சரித்து அனுப்பியுள்ளார்.
பின்னர், போலீஸ் ஸ்டேஷன் சென்ற முருகேசனை, வழிமறித்த பெரிய கடைவீதி கடைகாரர்கள் சிலர், 'எங்களை தொழில் செய்ய விடாமல் போலீசார் தடுக்கின்றனர்' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மிரட்டவும் செய்தனர்.
எஸ்.எஸ்.ஐ., அளித்த புகாரின் பேரில், போலீசாரைபணி செய்ய விடாமல் கூட்டம் கூட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது, பெரியகடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.