/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனிமையில் இருந்த வீடியோ; மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
/
தனிமையில் இருந்த வீடியோ; மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
தனிமையில் இருந்த வீடியோ; மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
தனிமையில் இருந்த வீடியோ; மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2025 11:14 PM
கோவை; காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காதலன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, பூலுவபட்டியை சேர்ந்தவர், 24 வயது இளம்பெண்; வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். தென்காசியை சேர்ந்த வக்கீல் விக்னேஸ்வரனும், இவரும் 2023ம் ஆண்டு முதல் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரின் பெற்றோரும் திருமணம் தொடர்பாக பேசினர்.
திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து பெண், விக்னேஸ்வரனிடம் கேட்டபோது, தனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க போவதாக, அப்பெண் கூறியுள்ளார். போலீசிடம் சென்றால், தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை, சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என, விக்னேஸ்வரன் மிரட்டினார்.
ஆனாலும் பயப்படாமல் அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், அனைத்து மகளிர் போலீசார், விக்னேஷ்வரனை கைது செய்தனர்.
விசாரணையில், அவரின் மொபைல் போனில், பெண்ணுடன் தனிமையில் எடுத்த வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள, விக்னேஷ்வரன் பணியாற்றும் வக்கீல் அலுவலகத்தில் இருக்கும் போனை எடுத்து பரிசோதனை செய்ய, போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போனை கைப்பற்றும் முடிவை கைவிட்டு, போலீசார் திரும்பினர்.

