/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு; அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
/
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு; அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு; அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு; அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
ADDED : அக் 26, 2024 06:40 AM
கோவை : கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு,29, சபரிராஜன், 29, சதீஷ், 32, வசந்தகுமார், 30, மணிவண்ணன், 32, ஹெரன்பால், 34, பாபு, 30, அருளானந்தம், 37, மற்றும் அருண்குமார் ஆகிய ஒன்பது பேரும், சிறையிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான, அப்போதைய சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., நிஷாவிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கை நவ., 8ம் தேதிக்கு நீதிபதி நந்தினிதேவி ஒத்திவைத்தார்.