/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
/
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
ADDED : பிப் 16, 2024 02:31 AM
கோவை:சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை குனியமுத்துார் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி 46. இவர் சித்தாபுதுார் தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு சீட்டு நிறுவனத்தில் பணம் வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களை சீட்டில் சேர்த்து பணம் முதலீடு செய்ய வைத்துள்ளார். அவ்வாறு ரூ.25 லட்சம் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீட்டு நிறுவனத்தை நடத்தி வந்த சித்தாபுதுாரை சேர்ந்த துரைசாமி 45 அவரது மனைவி கருணாம்பிகை 39 சீட்டு பணத்தை யாருக்கும் திருப்பி தராமல் இருந்து வந்தனர். மேலும் அலுவலகத்தை காலி செய்து தலைமறைவாக திட்டமிட்டு இருப்பதாக அய்யாசாமிக்கு தகவல் தெரிந்தது.
இதையடுத்து அய்யாசாமி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்த துரைசாமி கருணாம்பிகை ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.