/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரை மிரட்டிய இருவர் மீது வழக்கு
/
வாலிபரை மிரட்டிய இருவர் மீது வழக்கு
ADDED : அக் 21, 2024 04:18 AM
கோவை : புகாரை திரும்ப பெற வாலிபருக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை குறிச்சி காந்திஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 27. இவருடைய நண்பர் சந்தோஷ்குமார், 2021ம் ஆண்டு பார்த்திபன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பார்த்திபன் அவரிடம், தங்கள் நிறுவனத்தில் ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் முதலீடு செய்தால் மாதம், 50 ஆயிரம் ரூபாய் லாபமாக பெறலாம் என கூறியுள்ளார்.
சக்திவேல் அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன் பின் பார்த்திபன் லாபத் தொகை எதையும் அவருக்கு தரவில்லை.
சக்திவேல் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்திபன், மற்றும் அவரது கூட்டாளி கோகுலகிருஷ்ணன், சக்திவேல், சந்தோஷ்குமார் ஆகியோரை, அழைத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த பின், பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளி கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
புகாரை திரும்ப பெறும்படி மீண்டும் மிரட்டி உள்ளனர். சக்திவேல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பார்த்திபன், 35, மற்றும் கோகுல கிருஷ்ணன், 37 ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.