/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னணி ஓட்டல் உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வாய்ப்பு!
/
முன்னணி ஓட்டல் உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வாய்ப்பு!
முன்னணி ஓட்டல் உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வாய்ப்பு!
முன்னணி ஓட்டல் உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வாய்ப்பு!
ADDED : ஜன 06, 2024 12:52 AM

கோவை;கோவையில் மூன்று நாள் உணவுத்திருவிழா, 'டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்' நேற்று தொடங்கியது. நாளை நிறைவு பெறுகிறது.
கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சி, கொடிசியா தொழிற்காட்சி வளாக மைதானத்தில் நடக்கிறது. மாலை 5:00 மணி முதல், இரவு 10:30 வரை மணி நடக்கிறது.
கோவையில் உள்ள முன்னணி ஓட்டல்களின், 160 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, கார வகைகள், ஐஸ்கிரீம், சாட் வகைகள் இடம் பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.249 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை. டிக்கெட்டுகளை புக் மை ஷோ, பே டிஎம் இன்சைடர் செயலிகள் வழியாகவும் பெறலாம். நிகழ்ச்சி நடக்கும் நுழைவாயிலில், பிற்பகல் 2:00 மணி முதல் பெறலாம்.
மூன்று நாட்களும் மாலையில், பிரபல பாடகர்கள் ஸ்வேதா மோகன், சத்யபிரகாஷ், சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆனந்த் அரவிந்தாக்சன், நித்யஸ்ரீ ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த உணவு திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது.
முன்னதாக, உணவுத்திருவிழாவை கலெக்டர் கிராந்திக்குமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர். மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனர் சதீஷ்குமார், வருண் பீவரேஜ் சி.இ.ஓ., மன்மோகன் பவுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.