/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை
/
கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை
ADDED : மார் 05, 2024 12:04 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில் சென்னாமலை கரட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''சிறுத்தைக்கு வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிறுத்தை இன்னும் சிக்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை என்றால் வேறு இடத்திற்கு கூண்டு மாற்றப்படும்,'' என்றார்.

