/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் திருடன் நிக்கிறான்... போய் பிடிச்சுக்கோ! புகார்தாரரையே நேரில் போகச் சொன்ன போலீஸ்
/
சேவல் திருடன் நிக்கிறான்... போய் பிடிச்சுக்கோ! புகார்தாரரையே நேரில் போகச் சொன்ன போலீஸ்
சேவல் திருடன் நிக்கிறான்... போய் பிடிச்சுக்கோ! புகார்தாரரையே நேரில் போகச் சொன்ன போலீஸ்
சேவல் திருடன் நிக்கிறான்... போய் பிடிச்சுக்கோ! புகார்தாரரையே நேரில் போகச் சொன்ன போலீஸ்
ADDED : செப் 30, 2025 11:25 PM

போத்தனுார்: சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையில் வங்கி ஒன்றின் அருகே மர வேலை செய்பவர் கனகராஜ். இவர், சேவல் வளர்த்து வந்தார்.
கடந்த, 28ம் தேதி, நண்பருடன் பணியிடத்தில் உள்ள ஒரு அறையில் அவர் பேசிக்கொண்டிருந்தார். வேலையாட்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள ஒரு இயந்திரத்தின் அருகே சேவல் நின்றிருந்தது. அங்கு வந்த ஒருவர், சேவலை பிடித்துச் சென்றிருக்கிறார்.
சிறிது நேரத்துக்கு பின், அறையில் இருந்து வந்த கனகராஜ், சேவலை காணாமல் தேடினார். 'சிசி டிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் சேவலை பிடித்துச் செல்வதை பார்த்தார்.
சுந்தராபுரம் ஸ்டேஷனுக்கு சென்று, போலீஸ்காரர் கஜேந்திரனிடம் கேமரா பதிவை காண்பித்துள்ளார். அவரது போன் எண்ணை பெற்றுக் கொண்டு, அழைப்பதாக கூறி, திருப்பி அனுப்பியுள்ளார். அதன்பின், கனகராஜை தொடர்பு கொண்ட கஜேந்திரன், 'சேவலை திருடிச்சென்றவன் குறிச்சி பிரிவு பகுதியில் இருக்கிறான்; நீ போய் பார்' என அறிவுறுத்தியுள்ளார்.
கனகராஜ் கூறுகையில், 'சேவலை திருடிச் சென்றவனை, என்னை போய் போலீசார் பார்க்கச் சொல்கின்றனர். நான் போய் பார்த்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், என்ன செய்வது என நினைத்து அங்கு செல்லவில்லை. போலீஸ்காரரின் இச்செயல் என்னை அதிர்ச்சியடைய செய்தது. மீண்டும் நேற்று (நேற்று முன்தினம்) ஒரு போலீஸ்காரர் வந்து, கேமரா பதிவை வாங்கிக் கொண்டு, நான் பார்க்கிறேன் என கூறி சென்றார். என்ன ஆனது என தெரியவில்லை,'' என்றார்.
போலீஸ்காரர் கஜேந்திரனிடம் இது குறித்து கேட்டபோது, ''கனகராஜ் கொடுத்த வீடியோ பதிவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்தேன். திருடிச் சென்றவன் குறிச்சி பிரிவில் இருப்பது தெரிந்தது. கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க, வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், கனகராஜை அங்கு சென்று பார்க்க கூறினேன். அவரிடம் புகார் மனு பெற்று, சி.எஸ்.ஆர். கொடுக்க ஸ்டேஷனுக்கு செல்ல அறிவுறுத்தி இருந்தேன். இன்றும் (நேற்று) நான் வெளியூரில் தான் உள்ளேன்,'' என்றார்.
நல்ல கேசு...நல்ல போலீசு!