/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிசியாவில் நடக்கிறது கட்டுமானக் கண்காட்சி
/
கொடிசியாவில் நடக்கிறது கட்டுமானக் கண்காட்சி
ADDED : செப் 29, 2024 01:40 AM
கோவை: கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு (கிரிக்), கோவை மண்டல கட்டடப் பொறியாளர்கள் சங்கம் (கொஜினா) சார்பில், இரண்டு நாள் சர்வதேச கட்டுமானக் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, லஷ்மி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துராமன், காவேரி பைப் இணை நிர்வாக இயக்குநர் வினோத் சிங் ரத்தோர் துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில், நிலத்துக்குள் புதைக்கும் வாட்டர் டேங்க், கிச்சன் சிங்க், வெஸ்டர்ன் டாய்லெட் கம்மோடு, கழிவறை இன்டீரியர்கள், ஸ்டீல் கதவுகள், கட்டுமான இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள், டைல்ஸ், கடப்பா கற்கள், கிரானைட், பெயின்ட், யு.பி.வி.சி., கதவு மற்றும் ஜன்னல்கள், கிரில் வேலைப்பாடுகள், மணலுக்கு மாற்றான ஜிப்சம் பிளாஸ்டர், டெரகோட்டா டைல், கேரள வெட்டுக்கல், போரோதெர்ம் கற்கள், ஏ.ஏ.சி., இலகு ரக கான்கிரீட் கற்கள், பயோ செப்டிக் டேங்க், செங்கற்கள், சிமென்ட் தரத்தை பரிசோதிக்கும் வாகனம், அனைத்து வித கான்கிரீட்களுக்கான தீர்வுகள், பர்னிச்சர்...வங்கி சேவை என, கட்டுமானம் சார்ந்த 111 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில், கொஜினா துணைத்தலைவர் பழனிசாமி, செயலாளர் நாகேந்திரகுமார், பொருளாளர் ஸ்ரீநிவாசன், நிகழ்ச்சி செயலாளர் செந்தில்நாதன், ஆலோசகர் பிரபாகரன், முன்னாள் தலைவர் ஜெயவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கண்காட்சி இன்று நிறைவடைகிறது.