/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடி போதையில் உருண்ட கட்டட தொழிலாளி பலி
/
குடி போதையில் உருண்ட கட்டட தொழிலாளி பலி
ADDED : பிப் 12, 2024 11:37 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அருகே உள்ள கோவில்பாளையத்தில் கட்டட பணியை முடித்த தொழிலாளி மது போதையில் உறங்கியதால் உயிரிழந்தார்.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கோவில்பாளையம் அருகே உள்ள சேரன் நகரில், மயிலாடுதுறையை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ், 34, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கட்டட வேலை முடித்து சம்பளம் பெற்றுள்ளார். கட்டட பணி நடக்கும் இடத்திலேயே மது குடித்து விட்டு உறங்கியுள்ளார்.
அப்போது, அவர் கட்டத்தில் இருந்து உருண்டு விழுந்து காயமடைந்ததாக தெரிகிறது. மறு நாள் காலையில் ரத்த காயங்களுடன் மயக்கத்தில் இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.