/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து முக்கு சாலையில் போக்கு காட்டிய மாடு
/
ஐந்து முக்கு சாலையில் போக்கு காட்டிய மாடு
ADDED : பிப் 06, 2024 11:56 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், முக்கிய சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் நடமாட்டத்தால், வாகனங்களை இயக்குவதற்கு இடையூறு ஏற்படுகின்றன. போக்குவரத்து பாதிப்பு, விபத்து நடைபெறும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, கோவை சாலை, அன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனிடையே நேற்று மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஐந்து முக்கு சாலையில் மாடு ஒன்று சாலையின் குறுக்கே நின்று போக்கு காட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கால்நடைகளை சாலையில் உலாவ விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---

