/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 54 லட்சத்தில் கோசாலை
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 54 லட்சத்தில் கோசாலை
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 54 லட்சத்தில் கோசாலை
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 54 லட்சத்தில் கோசாலை
ADDED : ஜன 21, 2025 11:43 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் நந்தவனத்தில், 20 மாடுகள் கட்டி வைத்து வளர்க்க, 54 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இந்த கோவிலுக்கு தோலம்பாளையம் சாலையின் ஒரு பக்கம், புனித தீர்த்த தெப்பக்குளமும், அதன் எதிர்புறம் பூச்செடிகளை வளர்க்கும் நந்தவனமும் உள்ளது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், பசு கன்று குட்டிகளை காணிக்கையாக கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.
கோவில் நிர்வாகத்தினர் நந்தவனத்தில், திறந்த வெளியில் கன்றுகளையும், பசு மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்த பசுக்களை முறையாக வளர்க்க, கோசாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகம், 54 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை அமைத்து வருகிறது. கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
தற்போது கோவிலில் ஏழு மாடுகள் உள்ளன. இந்த மாடுகளுக்கு தேவையான தீவனம் வாங்கி இருப்பு வைத்து, கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த மாடுகளை சரியான முறையில் பராமரிக்க கோசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில், 20 மாடுகள் கட்டி பராமரிக்கும் அளவிற்கு, கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தீவனத் தொட்டிகள், கால்நடைகளுக்கு டாக்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறை, தீவன இருப்பு அறை ஆகியவை கட்டப்படுகின்றன. விரைவில் இப்பணிகள் செய்து முடிக்கப்படும்.
மேலும், நந்தவன இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க, 24.50 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு, நிர்வாகத்தினர் கூறினர்.