/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளிக்கு 'வலை'
/
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளிக்கு 'வலை'
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளிக்கு 'வலை'
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளிக்கு 'வலை'
ADDED : ஜூலை 29, 2025 09:02 PM

கோவை; ரயிலில் இருந்து குதித்து தப்பிய குற்றவாளியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு ஆலாநல்லுாரை சேர்ந்தவர் ஆனந்தன் தம்பி, 40. இவருக்கு மேற்கு வங்கத்தில் நடந்த ரூ.6 லட்சம் மோசடி வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்தது.
இவ்வழக்கில் கடந்த ஒரு மாதமாக, ஆனந்தன் தம்பியை மேற்கு வங்க போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஆனந்தன் தம்பி சொந்த ஊரான கேரளாவில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
கேரளா விரைந்த மேற்கு வங்க போலீசார், கோட்டயத்தில் பதுங்கியிருந்த ஆனந்தன் தம்பியை நேற்று முன்தினம் கைது செய்தனர். கடந்த, 26ம் தேதி மேற்கு வங்கத்துக்கு திருவனந்தபுரம் - சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து சென்றனர்.
கடந்த, 27ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தது. அதிகாலை, 2:10 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் நகரும் போது, ஆனந்தன் தம்பி, ரயிலில் இருந்து குதித்து தப்பினார்.
போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. கோவை மாநகர் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.