ADDED : ஜூன் 08, 2026 05:59 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: பரவலாக பெய்யும் பருவமழையினால் வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
வால்பாறை மக்களுக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை, எட்டு கி.மீ., தொலைவில் உள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்கிறது.
பரவலாக பெய்யும் பருவமழையினால், அக்காமலை தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
